அரசியல் தமிழகம் விளையாட்டு

மாநில அளவிலான குத்துசண்டை போட்டி! தாறுமாறாக குத்திய அமைச்சர் ஜெயக்குமார்!

Summary:

Minister jeyakumar boxing

மாநில அளவிலான குத்துசண்டை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். 

தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

குத்துசண்டை விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன்னதாக குத்துச்சண்டை பயிற்சியாளருடன், அமைச்சர் ஜெயக்குமார், ஜாலியாக மல்லுகட்டி நீண்ட நேரமாக விளையாடினார். பின்னர் விளையாட்டு முடிந்த பிறகு அமைச்சர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தபோது, நான் கல்லூரியில் படிக்கும் போதே மிகப்பெரிய குத்துச்சண்டை மாவீரன்தான் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சிறுவயதில் இருந்தே குத்துச்சண்டை மீதிருந்த ஈடுபாடுதான், தற்போது வெளிப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், இந்தியாவை ஊழல் மூலம் தலைகுனிய வைத்தவர்கள் திமுகவினர்தான் என்றும் குற்றம்சாட்டினார். 


Advertisement--!>