அரசியல் தமிழகம்

முடிந்தால் திமுக-வின் தலைவராகி காட்டுங்கள் பார்க்கலாம்! துரைமுருகனுக்கு சவால் விட்ட அமைச்சர் ஜெயக்குமார்!

Summary:

minister jayakumar talk about dmk


அதிமுகவில் கடைக்கோடித் தொண்டன் கூட தலைமை பொறுப்புக்கு வரலாம், முடிந்தால் திமுகவின் தலைவராகி காட்டட்டுமே ? மு.க.ஸ்டாலின் அதற்கு அனுமதிப்பாரா? என்று  அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், பெண்களுக்காக தனிப்படை அமைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம், திமுகவில் அது போல் நடக்காது என்று தெரிவித்தார்.இவரது கருத்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில்,3 முறை முதலமைச்சராக  இருந்த  பன்னீர் செல்வத்துக்கு, தனது பதவியை விட்டுத்தர தயாரா என கேள்வி எழுப்பினார்.

ஓபிஎஸ்க்கு முதலமைச்சர் பதவியை விட்டுத்தருவாரா என துரைமுருகன் விமர்சித்தது பற்றி அமைச்சரிடம் கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் உழைப்புக்கு பலன் எப்போதும் கிடைக்கும்.அடிமட்ட தொண்டன் கூட கொடிகட்டிய காரில் பயணிக்க முடியும். முடிந்தால் துரைமுருகன் திமுகவின் தலைவராகி காட்டட்டுமே? மு.க.ஸ்டாலின் அதற்கு அனுமதிப்பாரா? என்று கேள்வி எழுப்பினார்.


Advertisement