கட்டுமஸ்தான் உடம்பு..! இந்த பளுதூக்கும் வீரர் தற்போதைய பிரபலமான அதிமுக அமைச்சர்.! யார் தெரியுமா.?

கட்டுமஸ்தான் உடம்பு..! இந்த பளுதூக்கும் வீரர் தற்போதைய பிரபலமான அதிமுக அமைச்சர்.! யார் தெரியுமா.?


minister-d-jayakumar-school-age-photo

அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அவரது பள்ளி பருவ  புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் இராயபுரம் தொகுதியில்அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அமைச்சர் ஜெயக்குமார். எப்போதும் இயல்பான பேச்சும், கலகலப்பான பண்பும் கொண்டவர் அமைச்சர் ஜெயக்குமார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை அறிவியல் படிப்பும், சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பும் பயின்றுள்ளார். இவரது தற்போதைய நடவடிக்கைகள், புகைப்படங்கள் ஆகியவை மக்களுக்கு மிகவும் பரீட்சையமான ஒன்றுதான். ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் பள்ளியில் படிக்கும்போது எப்படி இருந்தார் என்று யாருக்காவது தெரியுமா.?

Minster D Jayakumar

பள்ளியில் பலு தூக்கும் போட்டியில் பங்கு கொண்டபோது....உடல் பலமே மனபலம் என பதிவிட்டு தனது பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சூப்பர் சார் என கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.