காவலர் வில்சன் கொலை வழக்கில் புது தகவல்..! கொலைக்கு பயன்படுத்தியது ராணுவ துப்பாக்கி..! டி.எஸ்.பி தகவல்..!

காவலர் வில்சன் கொலை வழக்கில் புது தகவல்..! கொலைக்கு பயன்படுத்தியது ராணுவ துப்பாக்கி..! டி.எஸ்.பி தகவல்..!


military-gun-used-for-kill-si-wilson

கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகள் அப்துல் ஷமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து 10 நாட்கள் காவலில் எடுத்து தமிழக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு குற்றவாளிகள் இருவரையும் கேரளா அழைத்துச் சென்று விசாரித்த போலீசார், துப்பாக்கி மற்றும் அரிவாள் பதுக்கிய இடம் மற்றும் கொலை திட்டம் தீட்டிய இடம், அவர்கள் பதுங்கியிருந்த இடம், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் குறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.

SI Wilson murder

இதனை அடுத்து கொலை செய்துவிட்டு, கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி எர்ணாகுளம் நகர பேருந்து நிலையம் அருகே உள்ள கழிவுநீர் ஓடையில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என்றும், ராணுவ உபயயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தபட கூடிய துப்பாக்கி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ராணுவ உபயயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தபடக்கூடிய துப்பாக்கி இவர்களிடம் எப்படி வந்தது என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.