கடன் தொல்லையால் பரிதாபம்..! காவல்நிலையம் முன் பெட்ரோல் ஊற்றி இளைஞர் தற்கொலை முயற்சி.. ஊசலாடும் உயிர்..!

கடன் தொல்லையால் பரிதாபம்..! காவல்நிலையம் முன் பெட்ரோல் ஊற்றி இளைஞர் தற்கொலை முயற்சி.. ஊசலாடும் உயிர்..!


men-suicide-attempt-infront-of-police-station

காவல் நிலையத்திற்கு முன்னதாக, தான் அளித்த புகாரின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட விவகாரத்தில் காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மானந்தாங்குடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் சுதாகர் (வயது 36). சுதாகர் தனக்கு ஏற்பட்ட இருதய பாதிப்பு சிகிச்சைக்காக, தனது மனைவி சுதாவின் அண்ணனான பிரஷாந்த் என்பவரிடம் ஒரு லட்சம் கடன் வாங்கியுள்ளார். 

இதில் 90 ஆயிரம் பணத்தை சுதாகர் திருப்பிக் கொடுத்த நிலையில், பிரசாந்த் மீதமுள்ள பத்தாயிரம் பணத்தை கொடுக்க வேண்டுமென தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தனது கணவரை தாக்கியதாக, அண்ணன் மீது சுதா பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

KERALA

இந்நிலையில், புகார் அளித்தபின்னும் உரிய நடவடிக்கை காவல்துறையினர் எடுக்கவில்லை என சுதாகர் நேற்று பேரளம் காவல் நிலையத்திற்கு முன் தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் சுதாகர் உயிருக்கு போராடிய நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவரது உடலில் 80 சதவீதம்  தீக்காயம் உள்ளதாகவும், தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், சுதாகர் கொடுத்த புகாரின் பேரில் அவரது மைத்துனரான பிரசாந்த் என்பவரை கேரள காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.