தமிழகம்

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற காமக்கொடூரன்.. மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்.!

Summary:

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற காமக்கொடூரன்.. மடக்கிப்பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்.!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது வீட்டிற்கு சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காமக்கொடூரன் கைது செய்யப்பட்டுள்ளான்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள படாளம் பகுதியை அடுத்த கருணாகரச்சேரியில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி. இவருடைய மகன் அப்பு என்கிற பிரதாப் (வயது 26). இவர் வாடகை கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் 38 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரும் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்ற காமக்கொடூரன், தனியாக இருந்த அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளான். இதனால் அந்த பெண் கூச்சலிட, சத்தம் கேட்டு அந்த பெண்ணின் வீட்டிற்கு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்தனர்.

அப்போது தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற, அந்த கொடூரனை மடக்கிபிடித்த பொதுமக்கள், அவருக்கு தர்ம அடி கொடுத்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்துறை இன்ஸ்பெக்டர் சித்ராதேவி, பிரதாப் மீது வழக்குப்பதிந்து கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்தார்.


Advertisement