திருடிய வாகனத்தில் அதிவேக பயணம்.. சரக்கு வேன் மோதி திருடன் பலி., 2 பேர் படுகாயம்.!

திருடிய வாகனத்தில் அதிவேக பயணம்.. சரக்கு வேன் மோதி திருடன் பலி., 2 பேர் படுகாயம்.!


men-dead-in-thindugal-highway-accident

இருசக்கர வாகனத்தை திருடிய 3பேர் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற நிலையில், பின்னால் வந்த சரக்கு வேன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பகுதியில் வசித்து வருபவர்கள் குமார், துளசி மற்றும் சக்திவேல். இவர்கள் கிருஷ்ணகிரியில் இருந்து இரு சக்கர வாகனம் ஒன்றை திருடி கொண்டு வந்துள்ளனர்.

அப்போது தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றதையடுத்து, மூன்று பேரின் மீதும் பின்னால் வந்த சரக்கு வேன் மோதியுள்ளது. இந்த விபத்தில் சக்திவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை தொடர்ந்து, மற்ற இருவரும் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியயுள்ளனர். 

thindugal

இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, மற்ற இருவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் விசாரணையில், அவர்கள் இருசக்கர வாகனத்தை திருடி வந்தது தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக காவல்துறையினரின் பாதுகாப்புடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.