சென்னையில் பரபரப்பு! கொரோனா வார்டில் பணியாற்றிய பயிற்சி பெண் மருத்துவர் மர்மமான முறையில் மரணம்!

சென்னையில் பரபரப்பு! கொரோனா வார்டில் பணியாற்றிய பயிற்சி பெண் மருத்துவர் மர்மமான முறையில் மரணம்!


medical-student-worked-at-corono-ward-dead

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு பிரிவில் பணியாற்றிய மருத்துவக்கல்லூரி இறுதியாண்டு மாணவி மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்துள்ளார்.

கொரோனா சிறப்பு பிரிவில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் நோயாளிகளை கவனிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் வேலூரை சேர்ந்த பிரதீபா என்ற மனைவியும் கொரோனா சிறப்பு பிரிவில் பணியில் இருந்துள்ளார்.

கொரோனா சிகிச்சைக்காக பணியாற்றுபவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதி இல்லாததால் பிரதீபா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவியர் விடுதியில் தனக்காக ஒதுக்கப்பட்ட அறையில் தனியாக தங்கியுள்ளார். வழக்கம் போல் இன்றும் பணிக்கு செல்ல ப்ரதீபாவின் தோழி அவரின் அறையை தட்டியுள்ளார்.

Corono ward

உள்பக்கமாக பூட்டியிருந்த அறை நெடுநேரமாகியும் திறக்காததால் சந்தேகமடைந்த மாணவிகள் காவலாளிகள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது பிரதீபா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். உடனே மருத்துவமனைக்கு அவரை தூக்கி சென்றனர். ஆனால் பிரதீபா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.

இதனையடுத்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் உடலை கீழ்ப்பாக்கம் பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு சென்றுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மாணவி பிரதீபா நேற்று இரவு பெற்றோரிடம் செல்போனில் பேசியதாகவும், கொரோனா காரணமாக வேலைப்பளு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பிரதீபா எந்த முறையில் மரணமடைந்தார் என்பது மர்மமாகவே உள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே பிரதீபா இறந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.