"இந்த உலகத்துல நான் பிறக்காமல் இருந்திருக்கவேண்டும்" - கடிதம் எழுதி கல்லூரி விடுதியில் நர்சிங் மாணவர் விபரீதம்..! கண்ணீரில் பெற்றோர்.!

"இந்த உலகத்துல நான் பிறக்காமல் இருந்திருக்கவேண்டும்" - கடிதம் எழுதி கல்லூரி விடுதியில் நர்சிங் மாணவர் விபரீதம்..! கண்ணீரில் பெற்றோர்.!



medical-student-suicide-issue

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஊருக்கு சென்றுவந்த சோகத்திலேயே இருந்த மாணவர், கல்லூரி விடுதியில் நள்ளிரவு நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை, படந்தாலுமூடு பகுதியில் நர்சிங் கல்லூரியானது செயல்படுகிறது. இக்கல்லூரியில் பல மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள். இக்கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த வீராசாமியின் மகன் சுமித்திரன் (வயது 19) இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 

இவர் கல்லூரி வளாகத்தில் இருக்கும் மாணவர் விடுதியில் தங்கியிருந்தவாறு படித்து வருகிறார். இவரது அறையில் 4 மாணவர்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வகுப்புகள் நிறைவுபெற்று தனது அறைக்கு சென்ற சுமித்திரன், நண்பர்களோடு பேசாமல் இருந்துள்ளார். எப்போதும் கலகலப்புடன் இருக்கும் நண்பன் அமைதியாய் இருக்கிறான் என்பதை அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். 

பின்னர், அவரிடம் மாணவர்கள் பேச்சுக்கொடுக்க, அவர் எதுவும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நள்ளிரவு 1 மணியளவில் அறையில் இருந்து வெளியேறிய சுமித்திரன், துணி காயப்போட இருந்த கயிற்றில் தூக்கில் தொங்கியுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின், இதுகுறித்து களியக்காவிளை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Medical student death

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மாணவரின் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் மாணவன் கைப்பட எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது. கடிதத்தில், "என்னால் பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக இருக்க இயலவில்லை. நான் உலகில் பிறந்ததை பாவமாக கருதுகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என எழுதியுள்ளார். 

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஊருக்கு சென்று வந்ததில் இருந்து மாணவர் சோகமாகவே இருந்துள்ளார் என சக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.