தமிழகம்

வெளியானது அரசு செவிலியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு.!

Summary:

medical exam board- nurse exam announced

தமிழக அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 520 செவிலியர் பணியிடங்களை ஒப்பந்தம் மற்றும் ஒருங்கிணைந்த சம்பள அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. 

பணி: செவிலியர் (Nurse) 

காலியிடங்கள்: 520 

தகுதி: செவிலியர் துறையில் பட்டயம் அல்லது பட்டம் பெற்ற பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் குடும்ப நலத்துறை கவுன்சில் நிரந்த பதிவு செய்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 57 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினர் ரூ.700ம், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.350ம் கட்டணமாக செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: http://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2019 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in/pdf/2019/Nurses_SNCU_Notification_06022019.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். 


Advertisement