ரோட்டு ஓரமாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த திருநங்கை.. அழைத்து விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

ரோட்டு ஓரமாக பிச்சை எடுத்துக்கொண்டிருந்த திருநங்கை.. அழைத்து விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஒரு நெகிழ்ச்சி சம்பவம்


MBBS Transgender begging at road side in Madurai

மதுரையில் பிச்சை எடுத்து சுற்றி திரிந்த திருநங்கை ஒருவரை போலீசார் விசாரித்தபோது அவர் ஒரு மருத்துவ பட்டதாரி என்ற தகவல் கிடைத்துள்ளது.

மதுரை மாநகர் திலகர் திடல் பகுதியில் தனியாக சுற்றித்திரிந்த திருநங்கை ஒருவரை அந்த பகுதியில் ரோந்து சென்ற போலீசார் அழைத்து விசாரித்தபோது, தான் MBBS படித்துள்ளதாகவும், தனக்கு திருநங்கை என்ற சான்றிதழ் பெறுவதற்கு சிரமமாய் இருப்பதாலும், சமூதாயத்தில் நிரந்தர அங்கீகாரம் இல்லாததால் தான் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவரது நிலையை உணர்ந்த காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள், திருநங்கையின் மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ்களை சோதனை செய்தபோது அவர் கூறிய அனைத்தும் உண்மை என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இந்த தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர் மருத்துவ தொழில் செய்வதற்கு தேவையான உபகரணங்களை தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்து, மருத்துவமனை அமைப்பதற்காக ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார் காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா.

உரிய அங்கீகாரம் இல்லாததாலும், உதவி செய்ய ஆள் இல்லாததாலும், மருத்துவருக்கு படித்துவிட்டு திருநங்கை ஒருவர் பிச்சை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.