இந்தியாவில் இதுவரைக்கும் நடக்காத ஒன்று.! ஆழ்கடலில் தம்பதியினர் செய்த பலே காரியம்.!

இந்தியாவில் இதுவரைக்கும் நடக்காத ஒன்று.! ஆழ்கடலில் தம்பதியினர் செய்த பலே காரியம்.!



marriage in under the sea

திருவண்ணாமலையை சேர்ந்தவர் சின்னத்துரை என்பவருக்கும் கோவையை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய அவர்களது பெற்றோர் முடிவு செய்தனர். இருவரும் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்துவதற்கு முடிவு செய்தனர்.

இதனையடுத்து இவர்கள் இருவரும் ஆழ்கடலில் நீந்தியபடி திருமணம் செய்ய விரும்பியுள்ளனர். இதனையடுத்து சென்னை நீலாங்கரை அருகே ஆழ் கடலில் 60 அடி ஆழத்தில் சின்னத்துரை-ஸ்வேதா இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. மணமக்கள் இருவரும் திருமண உடை அணிந்து பாதுகாப்பு வசதியுடன், ஆக்சிஜன் சுவாசிக்கும் கருவி அணிந்து கடலுக்குள் குதித்தனர்.

marriageஆழ் கடலில் இந்து முறைப்படி, மாலை மாற்றி, தாலி கட்டிக்கொண்டனர். இந்திய அளவில், ஆழ்கடலில் நடைபெற்ற முதல் திருமணம் இது என கருதப்படுகிறது. புதுமண ஜோடிக்கு நெட்டிசன்கள் பலரும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.