12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் எப்போது வழங்கப்படுகிறது.? பள்ளிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!mark certificate Issuance for 12'th


12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட உள்ள நிலையில், பள்ளிகளுக்கு வரும் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் கே.சண்முகம் புதன்கிழமை பிறப்பித்தாா்.

இந்த வருடம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 16 ஆம் தேதி வெளியானது. இந்தநிலையில் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஜூலை 24 முதல் 30-ஆம் தேதிவரை மதிப்பெண் சான்றிதழ்களை பெறுவதற்கான கட்டுப்பாட்டு விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மாணவர்கள் முகக்கவசமும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் ஆசிரியர்கள் முகக்கவசம் மற்றும் கையுறையும் அணிந்திருக்க வேண்டும். தனி மனித இடைவெளி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கை கழுவ வசதி உள்ளிட்ட விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Govt school

ஜூலை 24க்கு முன்பாக பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினியால் சுத்தப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். தினமும் சான்றிதழ் பணிகளை தொடங்கும் முன்பு கதவுகள், ஜன்னல்கள், மேஜைகளை சுத்தப்படுத்த வேண்டும்.

மாணவர்கள் கூட்ட நெரிசலைத் தவிா்க்க வேண்டும். எனவே, ஒவ்வொருவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் நேரத்தைத் தெரிவிக்க வேண்டும். ஒரு மணி நேரத்தில் 20 பேருக்கு மேல் வர அனுமதிக்கக் கூடாது.

மாணவா்களும், பெற்றோா்களும் நீண்ட வரிசையில் நிற்பதைத் தவிா்க்கும் வகையில், அவா்களுக்கென தனியாக இரண்டு காத்திருப்பு அறைகளை ஒதுக்கலாம். மதிப்பெண் சான்றுகளைப் பெறுவது, மறுகூட்டல், மறுமதிப்பீடு போன்ற அனைத்து நடவடிக்கைகளிலும் சமூக இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.