மாரிதாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி.! மிகக் கடினமாக நாட்கள் நகர்கின்றன.. உஷாரா இருங்கள் மக்களே.!

மாரிதாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி.! மிகக் கடினமாக நாட்கள் நகர்கின்றன.. உஷாரா இருங்கள் மக்களே.!


marithas-affected-by-corona

எழுத்தாளர் மாரிதாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாரிதாஸ் எழுத்தாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் என்று அறியப்படுகிறார். நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்த தனது கருத்துக்களை யூடியூப் வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார். சமீபகாலமாக இவர் பாஜகவிற்கு ஆதரவாகவும், திமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு எதிராகவும் சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

இதனால் பாஜக ஆதரவாளர்கள் இவரைக் கொண்டாடுவதும், பாஜகவிற்கு எதிரான கருத்துடையவர்கள் இவருடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் நடந்து வருகிறது. இவர் எந்த ஒரு வீடியோ போட்டாலும் அது ஒரே நாளில் வைரலாகிவிடும். இந்தநிலையில் மாரிதாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாரிதாஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில், "சில தினங்கள் முன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவர்கள் ஆலோசனை உரியப் பரிசோதனைகள் எடுத்துக் கொண்டேன், மருத்துவர்கள் பரிந்துரைப்படி சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். மிகக் கடினமாக நாட்கள் நகர்கின்றன. அனைவரும் கூடுதல் கவனமாக இருக்கவும்.