தமிழகம்

மாரடைப்பால் இறந்தவருக்கு கொரோனா உறுதி.! துக்க நிகழ்விற்கு சென்றவர்கள் பீதி..!

Summary:

Maradaippal iranthavaruku corona uruthi pethiyil uravinarkal

நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா மேல சாலையை சேர்ந்த 62 வயதான முதியவர் ஒருவர் கடந்த மாதம் உடல் நலக்குறைவால் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த முதியவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால் கொரோனா பரிசோதனை முடிவுகள் வராத நிலையில் நேற்று திடீரென முதியவருக்கு நெஞ்சு வலி ஏற்ப்பட்டுள்ளது. அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அடுத்து அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து அந்த முதியவரின் உடலானது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே எடுத்து கொண்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளி வந்துள்ளது. அதில் முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

அதனை அடுத்து இரவோடு இரவாக சுகாதார துறையினர் முதியவரின் வீட்டிற்கு சென்று உடலை கைப்பற்றி பாதுகாப்பு வழிமுறைகளுடன் நள்ளிரவில் அடக்கம் செய்துள்ளனர். இதனால் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement