தமிழகம் இந்தியா

3 மனைவிகளுக்கு தெரியாமல் நான்காவது பெண்ணை திருமணம் செய்ய முயன்ற கணவன்! மூன்றாவது மனைவியின் அதிரடி!

Summary:

man tryed fourth marriage


கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் என்பவர் சென்னை சாலிகிராமம் காந்தி நகர் பகுதியில் வசித்து வருகிறார். 47 வயது நிரம்பிய இவர் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு பெண்களை அனுப்பி வைக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மனைவி உள்ளனர்.

இந்நிலையில் அஜித்குமார் 6 வருடங்களுக்கு முன்பு தனக்கு திருமணம் ஆனதை மறைத்து தேவிகா என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வந்தார். மேலும் இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

arrest க்கான பட முடிவு

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜித்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி கேரளாவில் மனைவி, குழந்தைகள் இருப்பது தேவிகாவிற்கு தெரியவந்தது. இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுவந்துள்ளது. இதனையடுத்து அஜித்குமார் தேவிகாவை விட்டு பிரிந்து சென்று வேறு ஒரு பெண்ணிடம் பழகி அந்த பேனையும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதனை தெரிந்துகொண்ட தேவிகா, சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் ஒன்றை அளித்திருந்தார். அவர் அளித்த புகாரின் பேரில்  வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  இதில்  4-வது திருமணம் செய்ய முயன்ற அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர்.


Advertisement