லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் போல் நடித்து பணம் பறிக்க முயற்சி!! உஷாரான மனைவி! பின் நடந்தது என்ன??

லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் போல் நடித்து பணம் பறிக்க முயற்சி!! உஷாரான மனைவி! பின் நடந்தது என்ன??



Man try to stole money by act as income tax officer

சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வருபவர் அசோகன். இவர், தரமணியில் அமைந்துள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர், அலுவலகத்தில் பணியில் இருந்தபோது அங்கு காரில் வந்த நபர் , தான் லஞ்ச ஒழிப்பு துறையை சேர்ந்தவர் என்றும், நீங்கள் லஞ்சம் வாங்கியதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளது. உங்களை கைது செய்யாமல் இருக்க 25 லட்சம் பணம் தர வேண்டும் என கேட்டுள்ளார்.

அதற்கு அசோகன் நான் யாரிடமும் எந்த பணமும் வாங்கவில்லை என கூறியும் அந்த நபர் அசோகனின் அறை முழுதும் சோதனை செய்துள்ளார். மேலும் பின் அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று சோதனை செய்துள்ளார். பின்னர் அசோகனை மீண்டும் காரில் அழைத்து சென்ற நிலையில் அந்த நபர் மீது சந்தேகம் கொண்ட அசோகனின் மனைவி இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். 

பின்னர் போலீசார், அசோகனின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர். உடனே அந்த நபர் உஷாராகி காரை நிறுத்தி அசோகனை பாதியிலேயே இறக்கி விட்டு,  ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு அலுவலகத்துக்கு வருமாறு கூறிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் அசோகன் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கு சென்று விசாரணை செய்தபோது வந்த நபர் போலியானவர் எனவும் தன்னை ஏமாற்றி பணம் பறிக்க வந்ததையும் தெரிந்து கொண்டார். பின்னர் இதுகுறித்து தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அவர்கள் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.