தமிழகம்

தனியாக இருந்த அமெரிக்க இளம் பெண்..! நோட்டமிட்ட சாமியார்..! ஆசையில் உள்ளே நுழைந்தவரை புரட்டி எடுத்த சம்பவம்.!

Summary:

Man tried to Abuse Foreign girl near Thiruvanamalai

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியாக  தங்கியிருந்த அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண் ஒருவரை அந்த பகுதியை சேர்ந்த சாமியார் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா ஆர்கான் மாகாணத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் திருவண்ணாமலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 8 மாதங்களாக தங்கி உள்ளார். வெளிநாட்டு பெண் ஒருவர் தனியாக தஙகியிருப்பதை தெரிந்துகொண்ட மணிகண்டன் (34) என்ற சாமியார் அந்த பெண்ணை  மாதமாக நோட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்  அவரது வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்ட மணிகண்டன் அதிரடியாக அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட அந்த பெண் மணிகண்டனை கடுமையாக தாக்கியதோடு தன்னை காப்பாற்றும்படி கத்தி கூச்சலிட்டுள்ளார்.

உடனே அருகில் இருந்தவர்கள் வீட்டிற்குள் வந்து மணிகண்டனை பிடித்து கடுமையாக தாக்கியதோடு அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மணிகண்டன் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதில் அந்த பெண்ணிற்கு ஒருசில இடங்களில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement