தமிழகம்

பெண்களின் பின்புறம் தட்டும் இளைஞர்..! அலறிய பெண்கள்.! சாப்ட்வேர் எஞ்சினியரின் மட்டமான செயல்..!

Summary:

Man touches girls back at road

நடந்து செல்லும் இளம் பெண்களின் பின்புறம் தட்டி செல்லும் இளைஞர் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நங்கநல்லூர் பகுதியில்  மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் அங்கு நடந்து சென்ற இளம்பெண்ணின் பின்புறத்தை தட்டி அநாகரீகமாக நடந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் கூச்சலிடவே அந்த நபர் அங்கிருந்து தப்பித்துள்ளார். இதனை அடுத்து மீண்டும் அதே பகுதியில் வேறு ஒரு பெண்ணின் பின்புறம் தட்டும் போது அப்பகுதியினர் வாலிபரை மடக்கி பிடித்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசாரின் விசாரணையில், அந்த வாலிபர் சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார்நகரை சேர்ந்த சதீஷ்குமார்(30) என்றும், தனியார் கம்பியூட்டர் நிறுவனத்தில் கம்புயூட்டர் என்ஜீனியராக வேலைபார்த்துவந்த இவர் ஏற்கனவே திருமணமானவர். என்றும் தெரியவந்தது.

மேலும், பல பெண்களிடம் இதுபோன்று சதீஷ்குமார் அநாகரீகமாக நடந்துக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை பழவந்தாங்கல் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


Advertisement