தமிழகம்

கல்லூரி மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த கொடூர சம்பவம்!

Summary:

man tortured to college girl

ஈரோட்டில் 37 வயதான ராதகிருஷ்ணன் என்பவருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ராதாகிருஷ்ணன் அந்த பெண்ணிடம் தனது பிறந்தநாள் தினத்தன்று விருந்து கொடுப்பதற்காக கல்லூரி மாணவியை ஏற்காட்டிற்கு காரில் அழைத்து சென்றுள்ளார்.

காரில் அழைத்து செல்லும்பொழுது பலமுறை சில்மிஷம் செய்து வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை காண்பித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், மாணவியை பலமுறை மிரட்டி தவறாக நடந்துகொண்டதன் விளைவாக மனைவி கர்ப்பமாகியுள்ளார்.

இந்தநிலையில் மாணவிக்கு தாலிகட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருக்கலைப்பு செய்துள்ளார். பின்னர், அந்த மாணவியை அவரது நண்பர்களிடம் அனுசரித்து போக வேண்டும். அவர்களது ஆசைக்கு இணங்க வேண்டும் என கட்டாயப்படுத்தி மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்துபோன மாணவி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

மேலும், கல்லூரி மாணவியை தகாத வார்த்தையால் திட்டி, உன்னை போல் நான் 100க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்துள்ளேன். உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என மிரட்டியுள்ளார். இதனையடுத்து போலீசார் ராதாகிருஷ்ணனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
 


Advertisement