தமிழகம்

அரைநிர்வாணமாக வந்து பெண்களின் ஆடைகளை திருடி செல்லும் சைக்கோ! - அச்சத்தில் மக்கள்!

Summary:

Man stole ladies dress in channai

சென்னை கிண்டியை அடுத்து ஆதம்பாக்கம் நியூ காலனியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் அரைநிர்வாணமாக வந்து பெண்களின் ஆடைகளை மட்டும் மர்மநபர் ஒருவர் திருடி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட குடியிருப்பு பகுதியில் உள்ள ஒவொரு வீட்டின் ஜன்னலாக திறந்து கையில் கிடைக்கும் பெண்களின் உடைகளை அந்த மர்மநபர் திருடியுள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது பலரது வீட்டில் பெண்களின் உடைகள் திருடப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 

இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் கண்காணிப்பு கேமிராவை பார்த்தபோது விடியற்காலை 3.30 மணியளவில் மர்மநபர் ஒருவர் மேலாடையின்றி ஒவ்வொரு வீட்டின் கதவை திறப்பதும், அங்கிருக்கும் ஆடைகளை திருடுவதும் கேமிராவில் பதிவாகியிருந்தது.

இதனை அடுத்து குடியிருப்புவாசிகள் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் அந்த மர்மநபர் குறித்து விசாரித்துவருகின்றனர்.


Advertisement