கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
யாரு சாமி நீ?? ஓடும் லாரியில் ஏறி முட்டையை திருடும் நபர்.. வைரல் வீடியோ காட்சி இதோ..

முட்டை ஏற்றிச்சென்ற வாகனத்தில் இருந்து நபர் ஒருவர் முட்டைகளை திருடிச்செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
குறிப்பிட்ட சம்பவமானது கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் நடந்துள்ளது. முட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தநிலையில், அந்த வாகனத்தின் பின்புறமாக ஏறிய நபர் ஒருவர், வாகனத்தில் இருந்த முட்டைகளை எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டிற்குள் வைக்கிறார்.
போக்குவரத்துக்கு நெரிசல் மிகுந்த அந்த சாலையில், அந்த நபர் எந்த ஒரு பயமும் இன்றி முட்டைகளை திருடி தனது பாக்கெட்டிற்குள் வைத்துக்கொண்டு, பின்னர் வாகனத்தில் இருந்து இறங்கி சாவகாசமாக செல்கிறார். இந்த காட்சிகளை சரக்கு வாகனத்திற்கு பின்னால் காரில் சென்ற சிலர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட, இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.