வைரல் வீடியோ: இரவு நேரத்தில் LED பல்ப்பை லாவகமாக திருடும் நபர்.. அவர் கொடுக்கும் பாவனைகளை பாருங்கள்..

இரவு நேரத்தில் செல்போன் கடை ஒன்றில் இருந்த LED பல்ப்பை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடி


man-steal-led-bulb-from-mobile-shop-viral-video

இரவு நேரத்தில் செல்போன் கடை ஒன்றில் இருந்த LED பல்ப்பை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச்சென்ற சிசிடிவி வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள வெள்ளாண்டி வலசு பகுதியில் மதியழகன் என்பவர் செல்போன் கடை ஒன்றை நடத்திவருகிறார். இந்த கடையின் வெளிப்புறத்தில் LED பல்ப் ஒன்றை அவர் பொறுத்தியுள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனம் ஒன்றில் மதியழகனின் பூட்டிக்கிடந்த செல்போன் கடைக்கு வந்த நபர் ஒருவர் அங்கு மாட்டப்பட்டிருந்த LED பல்ப்பை திருடிச்சென்றார்.

முதலில் கடைக்கு வந்த அவர்  ஒரு தயக்கமும் இல்லாமல் வேறொரு விஷயத்திற்காக காத்திருப்பது போல் வெகுநேரமாக பாவனை செய்து கொண்டிருந்தார். பின்னர் அருகில் இருந்த கடை ஒன்றுக்கு சென்று டீ ஒன்றை வாங்கி வந்த அவர், டீ குடித்துகொண்டே ஆள் நடமாட்டத்தை கவனித்து, பின்னர் LED பல்ப்பை கழட்டி தனது லுங்கிக்குள் வைத்துக்கொண்டார்.

பின்னர் எதுவும் தெரியாததுபோல் கடை முன்பு அமர்ந்து டீ சாப்பிட அவர், பின்னர் தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் கடை முன்பு மாட்டப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தநிலையியல், தற்போது அந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

Credits: polimernews.com