"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
மனைவியின் கண்முன்னே தலை நசுங்கி உயிரிழந்த கணவன்.. எந்த ஒரு மனைவியும் காணக்கூடாத காட்சி.! சோக சம்பவம்.
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் மனைவி கண்முன்னே கணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பண்ட்ருட்டி அடுத்து அமைந்துள்ள தெங்கானூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயியான இவர் தனது மனைவி பானுவுடன் வில்லியனுரில் அமைந்துள்ள தனது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திருப்பியுள்ளார்.
கல்மண்டபம் என்ற பகுதி அருகே வந்துகொண்டிருந்தபோது அந்த பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றின் உள்ளே செல்ல முயன்ற லாரி சக்திவேலின் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில் சக்திவேல் லாரியின் பின்பக்க சக்கரத்தில் மோதி சம்பவ இடத்திலையே தலை நசுங்கி உயிரிழந்துள்ளார்.
அவரது மனைவி பானுவுக்கு இரண்டு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளநிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். விபத்து குறித்து அறிந்த சக்திவேலின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று உடலை எடுக்கவிடாமல் போராட்டம் நடத்தினர்.
விபத்துக்கு காரணமான ஓட்டுனரை கைது செய்யவேண்டும், சக்திவேல் இறந்ததற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் போன்ற கோரிக்கைளை முன்வைத்து மூன்று மணி நேரமாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டநிலையில் பின் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
தற்போது சக்திவேலின் உடல் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.