தமிழகம்

உயிருக்கு உயிராய் காதலித்த பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்!.

Summary:

உயிருக்கு உயிராய் காதலித்த பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்!.


காதலனை நம்பிச் சென்ற இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே கச்சிராபாளையம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அமராவதி. நர்சிங் படித்து வரும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரை 3 மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் காதலியுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட இவர், சனிக்கிழமை இரவு 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய அவர், காதலனான குணசேகரனனுடன் சென்ற போது, அவர் குமாதவச்சேரி செல்லும் சாலையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.


அங்கு மது அருந்திய அவர், தனது நண்பர்களையும் அங்கு அழைத்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற கோமுகி தாசன், ரட்சகன் மற்றும் ஒரு சிறுவன் என 3 பேர், குணசேகரனுடன் சேர்ந்து மது அருந்தி விட்டு அமராவதியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அதன் பின் துப்பாட்டாவால் அவரது கழுத்தை இறுக்கி, தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த அவர்கள், உடலை அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் தூக்கிட்டு வீசி விட்டு சென்றுள்ளனர். நேற்று பொலிசாருக்கு கச்சிராபாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் பெண்ணின் உடல் கிடப்பதாக தகவல் வந்ததையடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையை அடுத்து, குணசேகரன், கோமுகி தாசன், ரட்சகன் ஆகியோரைக் கைது செய்தனர். சிறுவன் கூர்நோக்கு இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டான்.


Advertisement