அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த தூய்மை பணியாளர்.!
தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மணலி பகுதியை சேர்ந்த 49 வயது பெண், உறவினர்கள் யாரும் இல்லாத சூழலில் யாசகம் பெற்று பிழைத்து வருகிறார். இந்தநிலையில் உடல்நிலை கோளாறு காரணமாக அந்த பெண் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த பெண்ணிற்கு கடந்த 30-ந்தேதி அறுவை சிகிச்சை முடிந்து இரவு படுக்கையில் இருந்தபோது தூய்மை பணியாளர் பழனி என்பவர் அப்பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து அங்கு பணிபுரியும் செவிலியர்களின் உதவியுடன் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர்.