தமிழகம்

புற்றுநோய் வலியில் துடி துடித்த மனைவி.! 65 வயதில் கும்பகோணம் டு பாண்டிச்சேரிக்கு 130 கிலோமிட்டர் சைக்களில் கூடிச்சென்ற கணவர்.! கண்கலங்க வைக்கும் சம்பவம்.!

Summary:

Man ride a bicycle from kumbakonam to pondicherry

புற்றுநோயால் வலியில் துடித்த தன் மனைவியை கும்பகோணத்தில் இருந்து பாண்டிச்சேரிக்கு சைக்கிளில் வைத்து கூட்டிச்சென்று சிகிச்சை வழங்கியுள்ளார் முதியவர் ஒருவர்.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு வசதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த அறிவழகன்(65) என்பவரின் மனைவி மஞ்சுளா(60) கடும் புற்றுநோயால் வலியில் துடித்துள்ளார்.

அந்த பகுதியில் இருந்த மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துசென்றுள்ளார் அறிவழகன். மஞ்சுளாவை சோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனே கீமோ தெரபி கொடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்யும் அளவுக்கு பணம் இல்லாத அறிவழகன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளார்.

மனைவி ஒருபுறம் வலியால் துடிக்க அவரை அப்படியே விடவும் மனமில்லை. பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்லலாம் என்றால் பேருந்து வசதியும் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் துடித்த அறிவழகனுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியுள்ளது. தன்னிடம் இருந்த பழைய சைக்கிள் ஒன்றை எடுத்து, அதில் மனைவியை அமரவைத்து இரவு முழுவதும் இந்த தள்ளாத வயதில் மிதிவண்டியை  மிதித்து சுமார் 130 கிலோமிட்டர் பயணம் செய்து காலையில் பாண்டிசேரி ஜிப்மர் மருத்துவமனையை சேர்ந்துள்ளார் அறிவழகன்.

ஆனால், கொரோனா காரணமாக ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு தற்காலிகமா மூடப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவு மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. மருத்துவர்களிடம் தனது நிலையை அறிவழகன் எடுத்துக்கூற, அவர் கூறியதை கேட்டு மருத்துவர்கள் ஒரு நிமிடம் ஆடிப்போனார்கள். இந்த வயதிலும் மனைவிக்காக இவ்வளவு தூரம் சைக்கிளில் பயணம் செய்துவந்த அறிவழகனுக்கு எப்படியும் உதவி செய்யவேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

இதனை அடுத்து, மஞ்சுளாவை மருத்துவமனையில் சேர்த்து அவர்க்கு தகுந்த சிகிச்சை வழங்கியுள்ளனர். மேலும், இருவரையும் மருத்துவமனையிலையே தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான மருந்து, சாப்பாடு போன்றவற்றை தங்கள் பணத்திலையே மருத்துவர்கள் வாங்கி கொடுத்துள்ளனர்.

எப்படி நீங்கள் இப்படி ஒரு முடிவை எடுத்தீர்கள்? இவ்வளவு தூரம் எப்படி உங்களால் சைக்கிளில் வரமுடிந்தது என மருத்துவர்கள் அறிவழகனிடம் கேட்க, என் பொண்டட்டிதான் சார் எனக்கு எல்லாம். அவ இல்லைன்னா நான் இல்ல" என்று கூறி நெகிழ வைத்திருக்கிறார் அறிவழகன்.

இந்நிலையில், இரண்டு நாட்கள் சிகிச்சை முடிந்து மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலமாக இருவரையும் கும்பகோணத்திற்கு அனுப்பிவைத்துள்ளனர் மருத்துவர்கள். குறிப்பிட்ட தூரம் வரைதான் மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல அனுமதி இருக்கும் நிலையில், அறிவழகனின் ஏழ்மையை புரிந்துகொண்ட மருத்துவர்கள் குமகோனம் வரை ஆம்புலன்ஸை இலவசமா இயக்க வலியுறுத்தி அவர்களை வீட்டிற்கே சென்று சேர்த்துள்ளனர்.


Advertisement