ஆன்லைனில் போன் ஆர்டர்.. ஆசையாக திறந்த பார்த்த நபருக்கு காத்திருந்த ஷாக்.!

ஆன்லைனில் போன் ஆர்டர்.. ஆசையாக திறந்த பார்த்த நபருக்கு காத்திருந்த ஷாக்.!


man-orders-mobile-from-online-gets-cards-bundle-instead-in-chennai

சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவரின் மகளின் ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்க ஆன்லைனில் பார்த்துள்ளார். அப்போது முகநூலில் 12,000 மதிப்பிலான செல்போன் ஆஃபர் விலையில் 2999 ரூபாய்க்கு தருவதாக விளம்பரம் வந்துள்ளது.

அதனையடுத்து முகமது அலி அந்த போனை ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்து ஆறு நாட்கள் கழித்து போன் வீட்டிற்கு வந்துள்ளது. முகமது அலியிடம் டெலிவரி பாய் பணத்தை கொடுத்து விட்டு பார்சலை திறந்து பார்க்க கூறியுள்ளார். ஆனால் முகமது அலி பார்சலை திறந்து பார்த்த பிறகு தான் பணத்தை தருவதாக கூறியுள்ளார்.

chennai

அதன்பின் முகமது அலி பார்சலை திறந்த பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் ஆர்டர் செய்த போனிற்கு பதிலாக சீட்டு கட்டு இருந்துள்ளது. அச்சமயத்தில் டெலிவரி பாயும் எனக்கு ஏதும் சம்பந்தம் இல்லை என்று கூறி நகர்ந்துள்ளார்.

உடனே அங்கிருந்தவர்கள் டெலிவரி பாயை மடக்கி பிடித்து பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். போலீசார் டெலிவரி பாயிடம் விசாரணை நடத்தியதில், தங்களுக்கு வந்த பார்சலை டெலிவரி செய்வது மட்டுமே எங்கள் வேலை என்று தெரிவித்துள்ளார்.  பிறகு, டெலிவரி பாய் வேலை பார்த்த நிறுவனத்தின் முகவரி, செல்போன் எண்களை வாங்கி விட்டு போலீசார் அவரை அனுப்பி வைத்தனர்.