தமிழகம்

இளம் பெண்ணை பின் தொடர்ந்து சில்மிஷம் செய்த இளைஞர்! பெண்ணின் தந்தை எடுத்த விபரீத முடிவு.

Summary:

Man killed youth who followed his daughter

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குட்டி. இவரது மகள் அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். இந்நிலையில் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த கண்ணன் என்பவர் ஜெயகுட்டியின் மகளை ஒருதலையாக காதலித்ததோடு அவர் கல்லூரி சென்று வரும்போது அவரை பின்தொடர்ந்து தொல்லை செய்துள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி நடந்த சம்பவம் குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார். உடனே கண்ணனின் தாயை பார்த்து உங்கள் மகனை கண்டித்து வைக்குமாறு ஜெயக்குட்டி கூறியுள்ளார். இருந்தும் மாணவியை பின்தொடர்வதை கண்ணன் நிறுத்தவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்து கண்ணனை நேரடியாக சந்தித்து கண்டித்துள்ளார் ஜெயக்குட்டி. இதில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளார் ஜெயக்குட்டி.

இதில் கண்ணன் சம்பவ இடத்திலையே உயிர் இழக்க, இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கண்னனின் உடலை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் ஜெய்குட்டியை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement