அடுத்தடுத்து மனைவி, மாமியார் கொலை! போலீசாருடன் வந்த மாமனாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

man killed wife and mother in law


man killed wife and mother in law

பெங்களூருவை சேர்ந்த அமித் என்பவர் தனது மனைவி மற்றும் 10 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை இந்த தம்பிதிகளுக்கு பிரச்னை ஏற்பட்டதில் மனைவியை சமயலறையில் வைத்து கொலை செய்துள்ளார் கணவன். 

இதனையடுத்து கொல்கத்தாவில் உள்ள மாமியார் வீட்டிற்கு அமித் சென்றுள்ளார். அப்போது அவர்க்கும், அவரது மாமியாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அமித் திடீரென அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மாமியாரை சுட்டுக்கொன்றார்.

Murder

இதனை பார்த்த மாமனார் அங்கிருந்து தப்பியோடிச்சென்று போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உள்ளே சென்று பார்த்த போது அமித் மற்றும் அவரது மாமியார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளனர். அதாவது மாமியாரை கொன்ற அமித் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. 

இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த வீட்டில் போலீசார் ஆய்வு செய்த போது கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், பெங்களூருவில் தனது மனைவியை கொலை செய்து விட்டு, இரண்டாவதாக மாமியாரை கொலை செய்வதற்காக கொல்கத்தா வந்ததாக அமித் எழுதியுள்ளார். இதனையடுத்து பெங்களூரு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அமித் தனது மனைவியை கொலை செய்துள்ளதை போலீசார் உறுதிசெய்துள்ளனர்.