தமிழகம் இந்தியா

மனைவியின் பிரசவத்திற்காக வெளிநாட்டிலிருந்து வந்த கணவன்! அங்கு நடந்த கனவிலும் நினைக்காத சம்பவம்!

Summary:

Man killed in bengalore for love marriage problem

சென்னை அயனவரத்தை சேர்ந்தவர் அகமத். சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்துவந்த இவர் அதே கல்லூரியை சேர்ந்த மதுரையை சேர்ந்த ஷில்பா எனப்வரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவரும் வேறு வேறு மதம் என்பதால் இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டாரும் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் துபாயில் உள்ள பிரபல மென்பொருள் நிறுவனம் ஒன்றில் இன்ஜினியராக இருவரும் பணியாற்றிவந்த நிலையில் ஷில்பா 7 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார்.

தனது மனைவி கர்ப்பமாக இருந்த காரணத்தால் அவரை அவரது தாய் வீட்டிற்கு அழைத்துவந்துள்ளார் அகமத். இந்நிலையில் பெங்களூர் சென்றுவிட்டு வருவதாக மனைவியிடம் அகமத் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் 4 மணியளவில் ஓசூர் வந்துவிட்டதாக அகமத் கூறியுள்ளார்.

அதன்பின்னர் அவரிடம் இருந்து எந்த செய்தியும் இல்லை, மேலும் அவரது தொலைபேசியும் அணைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஷில்பா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணையில் ரயில்வே தண்டவாளத்தில் அகமத் சடலமாக மீட்கப்பட்டார். அவரது தலையின் பின்புறம் பலமாக தாக்கப்பட்டிருந்தது.

காதல் திருமணம் செய்துகொண்டதால் அகமத் கொலைசெய்யப்பட்டாரா அல்லது சமீபத்தில் அகமத் பெங்களூரில் 1.5 கோடிக்கு புது வீடு ஓன்று வாங்கியுள்ளார். அதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஏதும் கொல்லப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Advertisement