ஆசைக்கு இணங்காததால் நேர்ந்த கொடூரம்.. அண்ணனால் தம்பியின் மனைவி, குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.!  

ஆசைக்கு இணங்காததால் நேர்ந்த கொடூரம்.. அண்ணனால் தம்பியின் மனைவி, குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.!  


man-killed-his-brother-wife-and-child

தனது விருப்பத்திற்கு ஒத்துழைக்காததால், தம்பியின் மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து தீ வைத்து எரித்த அண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகாமையில் மலையூர் அடுத்த வலசு பகுதியில் வசித்து வருபவர் நல்லப்பிச்சை. இவருக்கு சிவகுமார் மற்றும் கருப்பையா என இரு மகன்கள் உள்ளனர். இவர்களில் கருப்பையாவுக்கு திருமணமாகாத நிலையில், திருமணமான சிவகுமாருக்கு அஞ்சலை என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், அஞ்சலை 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து சிவகுமார் வியாபாரத்திற்கு சென்றதையடுத்து, அதே பகுதியில் உள்ள தோட்டத்தில், அஞ்சலை ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு விறகு வெட்ட சென்ற சிவகுமாரின் அண்ணன் கருப்பையா, தம்பியின் மனைவி என கூட பாராமல் அவரிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். இதற்கு அஞ்சலை எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தனது விருப்பத்திற்கு ஒத்துழைக்காததால் கோபமுற்ற கருப்பையா அஞ்சலையை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். 

மேலும், அஞ்சலையின் பெண் குழந்தையையும் கொலை செய்து இருவரையும் தீவைத்து எரித்துள்ளார். திடீரென தோட்டத்தில் புகை வருவதை பார்த்த அருகிலிருந்தவர்கள்  அங்கு சென்று பார்க்கும் போது, யாரையோ எரித்தது போல் தெரிந்துள்ளது. இதனால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் ராஜமுரளி உள்ளிட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது கருப்பையா தனது தம்பியின் மனைவி தனது விருப்பத்திற்கு ஒத்துழைக்காத காரணத்தால், அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனால் கருப்பையாவை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.