தமிழகம்

கணவன் கூட இருந்தும் காம ஆட்டம் போட்ட மனைவி.. தடம் மாறிய பெண்ணிற்கு பரிதாபமாக நேர்ந்த கதி..

Summary:

கள்ளக்காதலியை வாயில் விஷம் ஊற்றி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கள்ளக்காதலியை வாயில் விஷம் ஊற்றி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அடுத்த மென்னவேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் - பிரியங்கா தம்பதி. பிரியங்காவிற்கும் திருவாலங்காடு ஒன்றியம், நார்த்தவாடா கிராமத்தை சேர்ந்த ஜேசிபி ஓட்டுநரான ராஜ் குமார் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் கார்த்திக் - பிரியங்கா இருவருக்கும் சண்டை வந்த நிலையில், வீட்டில் இருந்து கோபித்துக்கொண்டு, தனது தோழி பவித்ரா வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு பிரியங்கா வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். ஆனால் அவர் தோழி பவித்ரா வீட்டிற்கு செல்லாமல், திருவாலங்காட்டில் வாடைக்கு வீடு ஒன்றை எடுத்து, அந்த வீட்டில் தனது கள்ளக்காதலன் ராஜ்குமாருடன் பிரியங்கா குடும்பம் நடத்திவந்துள்ளார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞருடன் ப்ரியங்காவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படும்நிலையில், இதுதொடர்பாக ராஜ்குமார் - பிரியங்கா இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, அங்கிருந்து கோபித்துக்கொண்டு பிரியங்கா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் பிரியங்காவை சமாதானம் செய்வதுபோல் அவரை வீட்டிற்கு அழைத்துச்சென்ற ராஜ்குமார், வீட்டிற்கு சென்றதும் ப்ரியங்காவின் இரண்டு கைகளையும் கட்டிபோட்டுவிட்டு, குளிர்பானத்தில் விஷம் கலந்து ப்ரியங்காவின் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றியுள்ளார்.

இதில் பிரியங்கா உயிரிழந்ததை அடுத்து, அவர் தற்கொலை செய்துகொண்டதாக அக்கம் பக்கத்தினரிடம் கூறிவிட்டு, காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, தங்கள் விசாரணையை தொடங்கினர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ராஜ்குமார் - பிரியங்கா இடையிலான சண்டை குறித்து பவித்ரா கூறிய தகவல்களால் சந்தேகமடைந்த போலீசார், ராஜ் குமாரை தீவிரமாக விசாரித்ததில், அவர்தான் பிரியங்காவை கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து ராஜ்குமாரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.


Advertisement