தமிழகம்

சிறுமியை திருமணம் செய்து கர்பமாக்கிய நபர்! ஒருவருடத்திற்கு பிறகு கணவனுக்கு கிடைத்த தண்டனை!

Summary:

man getting punishment for married young girl

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் 15 வயது சிறுமியை ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இதையடுத்து வேலுச்சாமியுடன் அந்த சிறுமி ஒரு வீட்டில் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து சிறுமி நிறைமாத கா்ப்பிணி ஆன நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன் அங்குள்ள மருத்துவமனையில் சிறுமியை வேலுசாமி சோ்த்துள்ளாா். அப்போது அந்த சிறுமியை பரிசோதனை செய்தபோது அந்த சிறுமி திருமண வயது அடையும் முன்பே கர்ப்பம் அடைந்தது மருத்துவர்களுக்கு தெரியவந்தது.

இதனையடுத்து மருத்துவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த சிறுமி திருமண வயது அடைவதற்கு முன்பே அவருக்கு திருமணம் நடந்ததும், தற்போது அந்த சிறுமி நிறைமாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. 

இதனையடுத்து போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.


Advertisement