இரவு 12 மணிக்கு பக்கத்து வீட்டு கேட் கம்பி குத்தி குடல் சரிந்து உயிருக்கு போராடிய வாலிபர்.! 2 மணி நேரம் நடந்த ஆப்ரேசன்.! பதறவைக்கும் சம்பவம்.!

நாகர்கோவிலில் இளைஞர் ஒருவர் பக்கத்துக்கு வீடு கேட்டின் மீது ஏறி நடந்தபோது சறுக்கி விழுந்து கேட்டில் இருந்த கம்பி குத்தி உயிருக்கு போராடும் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நாகர்கோவில் கோட்டார் செட்டி தெருவை சேர்ந்தவர் ராகேஷ் (29). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவு 12.30 மணியளவில் பக்கத்து வீட்டு கேட் மீது ஏறி சென்ற போது தடுக்கி கீழே விழுந்ததில் கேட்டில் இருந்த கூர்மையான கம்பி ராகேஷின் விலா பகுதியில் குத்தியுள்ளது.
இதனை அடுத்து ராகேஷ் வலியில் அலற, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்க முயன்றனர் ஆனால் அவர்களால் முடியவில்லை. உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ராகேஷை மீட்க முயன்றனர். அவர்களாலும் முடியவில்லை.
இதனை அடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து கேட்டில் இருந்த கம்பிகளை கட் செய்து ராகேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், குடல் பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டு நுரையீரல் ஓட்டை வரை சுருங்கி இருந்தது தெரிய வந்தது. உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு சுருங்கி போன நுரையீரல் பகுதி வெட்டப்பட்டு டியூப் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், கம்பி குத்தியதில் குடல் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போடப்பட்டுள்ளது. தற்போது ராகேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Source: www.dinakaran.com