கிராம மக்கள் கண் முன்னே மின்மாற்றியில் மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்த நபர்.! இந்த தவறை யாரும் செய்யாதீர்கள்.!

கிராம மக்கள் கண் முன்னே மின்மாற்றியில் மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்த நபர்.! இந்த தவறை யாரும் செய்யாதீர்கள்.!


man-died-in-transformer

புதுக்கோட்டை மாவட்டம் ரகுநாதபுரம் அருகே கீழாத்தூர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனராக இருந்தவர் கோவிந்தராஜ்.  இவர் அப்பகுதியில் நேற்று அதிகாலை நீர் தேக்க தொட்டிகளை நிரப்பி வந்துள்ளார். நேற்று காலை 11 மணி அளவில் அப்பகுதியில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் நேற்று காலை கோவிந்தாராஜ் அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் மின்வாரிய அதிகாரிகள் அனுமதி இல்லாமல் ஏறி பழுது பார்த்தபோது கோவிந்தாராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அலறி துடித்தனர்.

பொதுவாக கிராம புரங்களில் மின்வெட்டு ஏற்பட்டால் சிலர் மின்சார வாரியத்திற்கு தகவல் கொடுக்காமல் தாங்களே சரி செய்ய முற்படுகிறார்கள். அது முற்றிலும் தவறானது. இதுபோன்ற தவறால் தான் கோவிந்தராஜ் உயிர் பரிதாபமாக போனது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.