கட்டிய தாலியில் ஈரம்கூட காயல!! பாவி மகன் இப்படி பண்ணிட்டானே..!! புதுமாப்பிள்ளை தீக்குளித்து தற்கொலை..Man died after 5 months of his marriage near Krishnakiri

திருமணம் முடிந்து 5 மாதத்தில் புது மாப்பிளை தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ளது நெரிகம் கிராமம். இந்த கிராமத்தில் வசித்துவருபவர்தான் மனோகர். 24 வயதாகும் மனோகர் கிடைத்த வேலைகளை செய்துகொண்டு, அதில் வரும் வருமானத்தை வைத்து அடிக்கடி மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் திருமணம் செய்துவைத்துள்ளனர்.

கல்யாணம் நடந்தால் எல்லாம் சரியாகிவிடும் என பெற்றோர் நினைக்க, ஆனால் திருமணத்திற்கு பிறகும் மனோகர் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார். இதனால் மனோகரின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த புதுமாப்பிள்ளை மனோகர், தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீயை அனைத்து அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை நடைபெற்றுவந்தநிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் மனோகர் இறந்து விட்டார். இதுகுறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணம் முடிந்து 5 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒருபுறம் சோகம் என்றாலும், தாலி கட்டி, பல்வேறு கனவுகளுடன் இல்லற வாழ்க்கையை தொடங்கிய 5 மாதத்தில், கணவனை இழந்த அவரது மனைவியின் பரிதாபநிலை மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.