தமிழகம்

பாவம்..!! 14 வருஷம் காத்திருந்தும் பயன் கிடைக்கல..!! மனுஷன் என்ன நினைத்தாரோ தூக்குல தொங்கிட்டாரு..

Summary:

ராமநாதபுரம் அருகே தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்ப

ராமநாதபுரம் அருகே தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கப்பாநகரை சேர்ந்தவர் பாலுமகேந்திரன். தற்போது 41 வயதாகும் பாலுமகேந்திரனுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணம் முடிந்து 14 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சமீப காலமாக கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார் பாலுமகேந்திரன்.

இந்நிலையியல் சமீபத்தில் கணவன் மனைவி இருவரும் பரமக்குடியில் நடைபெற்ற உறவினர் ஒருவர் வீட்டின் காதணி விழாவிற்கு சென்றுள்ளனர். விழா முடிந்து பாலுவின் மனைவி தனது தாய் வீட்டிற்கு செந்துவருவதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார்.

இதனை அடுத்து தனியாளாக வீட்டிற்கு வந்த பாலு, என்ன நினைத்தாரோ? என்ன நடந்ததோ தெரியவில்லை, வீட்டிற்கு வந்தவர் மன வேதனையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement