நான் கேட்கும்போதெல்லாம் தரணும்.! ஜாலி வீடியோவை வைத்து பெண் மருத்துவர் உட்பட பல இளம் பெண்களை ஏமாற்றிய இளைஞர்.!

நான் கேட்கும்போதெல்லாம் தரணும்.! ஜாலி வீடியோவை வைத்து பெண் மருத்துவர் உட்பட பல இளம் பெண்களை ஏமாற்றிய இளைஞர்.!


Man cheated young girls using private videos near kanyakumari

இளம் பெண்களை டார்கெட் செய்து பணம் பறித்த கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த மோசடி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளன்னர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் 26 வயது இளைஞர் காசி என்ற சுஜி. டிப்ளோமா படித்துவிட்டு ஊரைச்சுற்றி வந்துள்ளார். இதனிடையே ஜிம்முக்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்த காசி தனது சிக்ஸ் பேக் உடம்பு, கூலிங் க்ளாஸ் என கலர் கலராக புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கியுள்ளார்.

மேலும், காசியின் தந்தை இறைச்சி வியாபாரம் செய்து வந்தநிலையில், தனது குடும்பம் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதாகவும், தான் ஒரு தொழிலதிபர் என்றும் பெண்களிடம் கூறி பல்வேறு பெண்களுடன் சமூக வலைத்தளங்களில் பழகிவந்துள்ளார் காசி.

இப்படி இவரது வலையில் சிக்கியவர்தான் சென்னையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர். காசியின் பேச்சிலும், புகைப்படத்தையும் பார்த்து மயங்கிய அந்த பெண் மருத்துவர் காசியை பலமுறை நேரிலும் சந்தித்துள்ளார். இப்படி நேரில் சந்திக்கும்போது காசி அந்த இளம் பெண்ணுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்து வைத்துள்ளார்.

நாளடைவில், நீ என்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம், வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், நான் கேட்கும் பணத்தை தரவில்லை என்றால் அனைத்தையும் இணையத்தில் வெளியிடுவேன் என பெண் மருத்துவரை மிரட்டியுள்ளார் காசி. இதனை கேட்டு அதிர்ந்துபோன அவர் காசி கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார்.

அப்படி இருந்தும், போலியான கணக்கு மூலம் மருத்துவரின் நெருக்கமான புகைப்படங்களை காசி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிர்ந்துபோன அந்த இளம் பெண், இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் காதல் மன்னனாக வலம் வந்த காசியைக் கைது செய்து சிறையில் அடைந்துள்ளார்கள்.

மேலும், காசியின் செல்போனை சோதனை செய்து பார்த்ததில் பலவேறு இளம் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியாக்களை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கூறும் பட்சத்தில் காசி மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு எனவும் போலீசார் கூறியுள்ளனர்.