ஆசை தீர 8 பெண்களுடன் திருமணம்! உல்லாசமாக இருந்துவிட்டு இளைஞர் செய்த மோசமான காரியம்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது இளைஞரான சந்தோஷ் என்பவர் திருப்பூர் பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் சத்யா என்ற இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
திருமணம் முடிந்து இருவரும் திருப்பூரில் தனியாக வசித்துவந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் சந்தோஷை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை என்பதால் சத்யா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனிடையே சந்தோஷ் தனது சொந்த கிராமத்தில் இருப்பதாகவும், சசிகலா என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்திவருதாகவும் சத்யாவிற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து இரண்டாம் திருமணம் குறித்து விசாரிக்க சத்யா சந்தோஷின் கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால், சந்தோஷ் சத்யாவை அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் சத்யா கொடுத்த புகாரை அடுத்து போலீசார் சந்தோஷ் மற்றும் சசிகலாவை காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரித்துள்னனர். இதில், சத்யா, சசிகலா போன்று 8 பெண்களை சந்தோஷ் காதலித்து திருமணம் செய்ததாகவும், திருமணத்திற்கு பிறகு அவர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு நகை, பணத்தை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து வேறொரு பெண்ணை திருமணம் செய்வதை வழக்கமாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துளனர்.