தமிழகம்

கிட்ட வந்தா கீழ குதிச்சுருவேன்..! ஊரடங்கு சயமத்தில் உயர் மின் கோபுரம் மீதேறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்...!

Summary:

Man arrested who tried suicide attempt near sivagangai

கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. இநேரத்தில், குடிபோதையில் நபர் ஒருவர் உயர் மின் கோபுரம் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரப்பரை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே ஓக்கூர் திருப்பதி நகரில் வசித்துவருபவர் ஜீவா என்ற இளைஞர். இவர், ஊரடங்கு சமயத்திலும் எப்படியோ மது வாங்கி குடித்துவிட்டு தனது மனைவியுடன் சண்டைபோட்டுள்ளார். இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் சண்டையை விலக்கி விட்டு, ஜீவாவை திட்டியுள்ளார்.

இதனால் மனஉளைச்சல் அடைந்த ஜீவா, தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் உயர் மின் கோபுரம் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள், போலீசார், அந்த பகுதி வட்டாட்சியர் மைலாவதி போன்றோர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சமாதானம் செய்து ஜீவாவை போலீசார் கீழே இறக்கி மருத்துவமனையில் சேர்த்தனர். இதனிடையே ஜீவாவின் பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டதால் அதனை சுற்றியுள்ள பலபகுதிகளில் 3 மணி நேரம் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் பல மடங்கு வேலைப்பளுவை சந்தித்துள்ள போலீசார், ஜீவாவின் தற்கொலை மிரட்டலால் மேலும் தலைவலியை சந்தித்துள்ளனர்.


Advertisement