இரண்டு மனைவிகளும் ஓடிபோய்ட்டாங்க! வேற வழி இல்லாமல் இப்படி பண்ணிட்டேன்! அதிர வைத்த வாக்குமூலம்.

இரண்டு மனைவிகளும் ஓடிபோய்ட்டாங்க! வேற வழி இல்லாமல் இப்படி பண்ணிட்டேன்! அதிர வைத்த வாக்குமூலம்.


Man arrested who gave bomb blast threat

ஈரோடு ரயில் நிலையத்திற்கும், பேருந்து நிலையத்திற்கும் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் குண்டு இன்னும் சற்று நேரத்தில் வெடிக்க இருப்பதாகவும் தான் காஷ்மீரில் இருந்து வந்த தீவிரவாதி எனவும் கூறி சென்னை காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு முன்தினம் தொலைபேசி அழைப்பு ஓன்று வந்தது.

இதனை அடுத்து உஷாரான போலீசார் இதுகுறித்து ஈரோடு காவல்துறைக்கு தகவல் கொடுத்து அதன்பேரில் சோதனை நடைபெற்றது. இறுதியில் இது வெறும் புரளி என்று போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் மிரட்டல் வந்த தொலைபேசி நம்பரை வைத்து ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையத்தை சேர்ந்த லிங்கராஜ் என்பவரை கைது செய்து விசாரணை செய்தனர்.

Crime

போலீசார் விசாரித்ததில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மதுபோதையில் தனது தொலைபேசியை தொலைத்துவிட்டதாக லிங்கராஜ் கூறியுள்ளார். பின்னர் தொலைபேசியின் சிக்னலை வைத்து மில் தொழிலாளி சந்தோஷ்(41) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இதனை அடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு இரண்டு முறை திருமணம் முடிந்தும் இரண்டு மனைவிகளும் வேறொருவருடன் ஓடிவிட்டனர். இதனால் தான் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும், மில்லில் வேலைபார்ப்பது கடினமாக இருந்தததால் ஏதவது தவறு செய்துவிட்டு சிறைக்கு சென்றால் மூன்று வேலையும் உணவு கிடைக்கும் என்பதற்காகவே இப்படி செய்ததாக சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

சந்தோஷ் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தற்போது அவரை கைது செய்து சிறையில் அடைத்துளனர்.