ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த ஹோட்டல் தொழிலாளி அதிரடி கைது!



Man arrested uploading adult photos online

போலி பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் சிறார் ஆபாச படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த 35 வயது நபரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த மாரப்பமபாளையத்தை சேர்ந்தவர் குருசாமி. 35 வயதான இவர் சென்னையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் பணியாற்றியுள்ளார். 

Fake facebook accountகடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார் குருசாமி. இதனையடுத்து சென்னையில் உள்ள சமூக ஊடகவியல் போலீசாருக்கு குருசாமியின் செல்போனில் இருந்து போலி பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் சிறார் ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்யப்படுவது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்த தகவலை நாமக்கல் போலீசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குருசாமியை தொடர்ந்து கண்காணிக்க துவங்கிய நாமக்கல் சைபர் கிரைம் போலீசார் குருசாமியை கைது செய்து அவரது செல்போனையும் பறிமுதல் செய்துள்ளனர்.