தமிழகம்

பகலில் பிச்சைக்காரன், இரவில் இளம் பெண்களுடன் உல்லாசம்! இளைஞன் கூறிய அதிர்ச்சி செய்தி!

Summary:

Man arrested in nellai

பகலில் பிச்சைக்காரன் போல் நடித்தும், இரவில் பெண்களுடன் உல்லாசம் அனுபவிப்பதுமாக இருந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது அத்திரிமலை. அந்த பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலுக்கு போகவேண்டுமென்றால் அங்கு உள்ள கல்லாற்றை கடந்துதான் போகவேண்டும்.

இந்த கல்லாற்று பகுதி காட்டுப்பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். அப்போது அந்த பகுதியில் சுப்பிரமணி என்ற இளைஞரை பிடித்து வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். பலமுறை எச்சரித்தும் சுப்பிரமணி அதனை நிறுத்திக்கொள்ளவில்லை. இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் சுப்ரமணியன் நடமாட்டத்தை கவனிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் அவர் இளம் பெண்களை கூட்டி வந்து காட்டு பகுதியில் உல்லாசமாக இருந்துள்ளார். இதனை அறிந்த வனத்துறையினர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சுப்ரமணியை கைதுசெய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பகல் நேரத்தில் பிச்சை எடுப்பதும், அழுக்கான உடை அணிந்து ரயிலில் பிச்சை எடுப்பது, தனியாக இருக்கும் பெண்களிடம் நகைகளை பறிப்பது என மோசடி வேளைகளில் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பதும், அந்த பணத்தை வைத்து கஞ்சா, மது, மாது என கடந்த ஐந்து வருடங்களாக உல்லாசமாக இருந்ததாக சுப்பிரமணி தெரிவித்துள்ளார்.


Advertisement