தமிழகம்

ஆபாச படங்கள் பார்ப்பவர்கள், பகிர்ப்பவர்கள் விவகாரம்..! இளைஞரை கைது செய்துள்ள போலீசார்..!

Summary:

Man arrested in karur who shared video on internet

உலகளவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றுவரும் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் உலகளவில் சிறார் சம்மந்தமான ஆபாச படம் பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சிறுவர் சம்மந்தமான ஆபாச படங்களை அதிகம் பார்ப்பவர்கள், மற்றவர்களுடன் பகிர்பவர்களை குற்றப்பிரிவு போலீசார் பொறிவைத்து கைது செய்துவருகின்றனர். இதற்கு முன்னர் திருச்சியில் ஒருவரும், கோவையில் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தநிலையில் தற்போது கரூரில் இருந்து மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூரில் உள்ள மசாஜ் நிலையத்தில் பணியாற்றி வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த நியாஸ் அலி என்பவரை சிறார் ஆபாச படங்களை டவுன்லோடு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றத்திற்காக போலீசார் கைது செய்துள்ளன்னர்.


Advertisement