தமிழகம்

9-ஆம் வகுப்பு பயிலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. கொலை மிரட்டல் விடுத்த நயவஞ்சகனின் பெற்றோர்.!

Summary:

9-ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு..கொலை மிரட்டல் விடுத்த நயவஞ்சகனின் பெற்றோர்.!

அரியலூர் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததற்காக ரஞ்சித் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள தூத்தூர் அருகாமையில் அமைந்துள்ள தேளூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன். இவரின் மகன் ரஞ்சித், பி.ஏ தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு வயது 20. இந்த நிலையில், ரஞ்சித் அதே பகுதியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை காதலித்துள்ளார்.

இதனையடுத்து காதலை காரணம் காட்டி சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறிய நயவஞ்சகன் ரஞ்சித் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். மேலும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளான். இதனை அறிந்த இரு தரப்பு குடும்பத்தினருக்கும் இடையே பெரும் தகராறு ஏற்பட்டு இருக்கின்றது.

தொடர்ந்து சிறுமியின் குடும்பத்தாரை தாக்கிய ரஞ்சித் குடும்பத்தினர் கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுமியின் குடும்பத்தார் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துள்ளார்.

மேலும் ரஞ்சித்தை பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலிசார் கைது செய்தனர். அத்துடன் ரஞ்சித்தின் தாய்- தந்தையான முருகேசன்-சுதா மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


Advertisement