தமிழகம்

ஆசன வாயில் கடுமையான வலி..! கிரிக்கெட் விளையாடிய 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை..! நியாயம் கேட்க சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி.!

வீட்டின் முன்பு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை அழைத்துச்சென்று பாலியல் கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர் வீட்டின் முன்பு தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது அந்த பக்கமாக பைக்கில் வந்த அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்ற இளைஞர் அந்த சிறுவனை அழைத்து பைக்கில் ஏறுமாறு கூறியுள்ளார்.

ஏதோ அவசர உதவிக்காக அழைப்பதாக நினைத்து சிறுவனும் சக்திவேலின் பைக்கில் ஏற, சக்திவேல் நேராக அவரது வீட்டிற்கு சென்று அந்த 14 வயது சிறுவனை பாலியல் கொடுமை செய்துள்ளார். பயந்துபோன சிறுவன் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் விவரத்தை கூறியுள்ளார்.

இதனை கேட்டு பதறிப்போன சிறுவனின் தாய், சக்திவேல் வீட்டிற்கு சென்று அவரது தாயாரிடம் நியாயம் கேட்டுள்ளார். தனது மகன் மீது தப்பு இருப்பதை உணராத சக்திவேலின் தாய் சிறுவனின் தாயிடம் சண்டை போட்டதோடு அவரை அசிங்கமாகவும் திட்டி அனுப்பியுள்ளார்.

இதனால் மேலும் வேதனை அடைந்த சிறுவனின் தாய் நடந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் சக்திவேலை தேடி வருகின்றனர்.

ஆசன வாயில் கடுமையான வலியுடன் அந்த சிறுவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement