குப்பைத்தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட அழகிய ஆண்குழந்தை! குழந்தைக்கு அழகிய பெயர் வைத்து மீட்பு குழுவை பாராட்டிய அமைச்சர்! - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் மருத்துவம்

குப்பைத்தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட அழகிய ஆண்குழந்தை! குழந்தைக்கு அழகிய பெயர் வைத்து மீட்பு குழுவை பாராட்டிய அமைச்சர்!

சென்னை பாரிமுனை பகுதியில் கடந்த 14-ஆம் தேதி, ஒரு குப்பைத்தொட்டியில் ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இது குறித்து தகவலறிந்து குப்பைத்தொட்டியில் இருந்து குழந்தையை மீட்ட போலீசார், பச்சிளம் குழந்தையை 108 ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்ற அக்குழந்தைக்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட தாய்ப்பால் வங்கி மூலமாக அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அந்த குழந்தை பூரண நலமாக உள்ளது.

இதனையடுத்து அக்குழந்தைக்கு முத்தமிழ்செல்வன் என்று பெயர் வைத்து, சமூக பாதுகாப்பு துறை குழந்தைகள் நல குழுவிடம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஒப்படைத்தார். இந்த குழந்தையை சரியான நேரத்தில் மீட்டுவந்த போலீசாருக்கும், ஆம்புலன்சு டிரைவருக்கும், சிகிச்சை அளித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கும், குழந்தைகள் நல துறைக்கும் பாராட்டுகளை தெரிவித்துள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo