அரசியல் தமிழகம்

பாஜகவில் இணைந்த முக்கிய தலைவர்.! உச்சகட்ட சந்தோஷத்தில் பாஜகவினர்.! கடும் சோகத்தில் முக்கிய கட்சி.!

Summary:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர் இன்று பாஜகவில் இணைந்தார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளநிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்திலிருந்து பாஜக-வில் முக்கிய புள்ளிகள் இணைந்து வருகின்றனர். இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன பொதுச் செயலாளராக இருந்த ஏ.அருணாசலம் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியதில் இருந்து கமலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் ஏ.அருணாசலம். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் முக்கிய நிர்வாகி ஒருவர் தேசிய கட்சிக்கு தாவுவது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் ஏ.அருணாசலம் பாஜகவில் இணைந்தார். 


நேற்று எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை ஒட்டி செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், மாற்றுக் கட்சியை சேர்ந்த மிக முக்கியத் தலைவர் இன்று (டிசம்பர் 25) பாஜகவில் இணைகிறார் என்று கூறினார். இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன பொதுச் செயலாளராக இருந்த ஏ.அருணாசலம் பாஜகவில் இணைந்துள்ளார். 


Advertisement--!>