புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
பங்குச்சந்தை முதலீடுகளால் நஷ்டம்; இளைஞர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சோகம்.!
தனது முதலீடுகள் தொடர்ச்சியாக சரிவை சந்தித்த காரணத்தால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள பொன்மேனி பகுதியில் வசித்து வருபவர் முத்துக்குமார் (வயது 38). இவர் பங்குசந்தையில் முதலீடு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே முத்துக்குமாரின் மதிப்புகள் சரிந்துள்ளது.
இதனால் அவருக்கு தொழில் சரிவு ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்ட நிலையில், ஒருநாள் விட்டதை மறுநாள் பிடிக்கலாம் என்று எண்ணி சரிவினை சந்தித்து இருக்கிறார். ஒருகட்டத்தில் விரக்தியடைந்த முத்துக்குமார் தனது வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார்.
உயிருக்கு போராடிய முத்துக்குமாரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தபோது அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.